நடிகை அமலா பாலுக்கு தொல்லை - அதிரடியாக முன்னாள் காதலர் கைது!
தமிழ் சினிமாவில், மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அமலா பால்.
முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், இயக்குனர் ஏ.எல்.விஜய் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்திருந்தார்.
அதன் பின், ஏஎல் விஜய் மறுமணம் செய்துகொண்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அமலாபால் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பவீந்தர் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பாலுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.
அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இதனிடையே போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், விழுப்புரம் மாவட்டம்

கைது
ஆரோவில் அருகே நடிகை அமலா பால் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பவீந்தர் சிங்கை விழுப்புரம் போலீசார் ராஜஸ்தானில் கைது செய்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக 11 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.