அட நடிகை அமலா பாலின் மகனா இது? நன்றாக வளர்ந்துவிட்டாரே... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை அமலா பால் தனது மகன் இலாய் உடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படங்டங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அமலா பால்
இந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் தான் நடிகை அமலாபால்.
அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
டாப் நாயகியாக இருந்தபோதே இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த அமலா பால், 2017ல் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதை தொடர்ந்து, இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது சினிமாவை ஓரங்கட்டிவிட்டு கணவன் மற்றும் குழந்தையுடன் அமலா பால் நேரம் செலவிட்டு வருகின்றார்.
இந்நிலையில், தற்போது, தன் மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அமலா பாலின் மகன் நன்றாக வளர்ந்துவிட்டார் என்றும் அம்மாவான பின்னரும் அமலா பால் குறையாத அழகுடன் இருக்கின்றார் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |