கோபத்தில் கணவரை பளார் என அறைந்த அமலாபால்... வைரலாகும் காட்சி
நடிகை அமலா பால் தனது கணவரை அடித்த காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
அமலா பால்
தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களுடன் நடித்து பிரபலமான அமலா பால். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்பு விவாகரத்து செய்து பிரிந்தார்.
பின்பு கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார்.
கர்ப்பமாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதுடன், வயிற்றில் குழந்தையை வைத்து நடனமாடி காணொயினையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.
திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய கணவருடன் இணைந்து அமலா பால் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் நன்கு வைரலாகி வருகிறது.
தற்போது இவர்கள் இருவரின் ரீல்ஸ் தற்போது கவனம் ஈர்த்து வருகின்றது. அதில் அமலா பாலும் ஜெகத் தேசாயும் அருகருகே அமர்ந்திருக்க, அமலா பால் வீடியோவில் பேச முயற்சிக்கின்றார்.
அருகில் ஜெகத் வாயால் ஊதி அமலாபாலின் முடியை கலைத்து விடுகின்றார். இதனை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை செய்ததும் அமலாபால் கோபத்தில் பளார் என கணவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இவர்களின் செல்ல சண்டையை அவதானித்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |