நான் நடிகைன்னே அவருக்கு தெரியாது! கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய அமலா பால்
நடிகை அமலா பால் சமீபத்திய பேட்டியொன்றில் தனது கணவர் ஜகத் தேசாய் குறித்து பகிர்ந்துள்ள விடயங்கள் இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
நடிகை அமலா பால்
இந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் தான் நடிகை அமலாபால்.
அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
டாப் நாயகியாக இருந்தபோதே இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த அமலா பால், 2017ல் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதனை தொடர்ந்து நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை தான் ஏற்றுக்கொள்வதையும் அமலா பால் காணொளியாக வெளியிட்டார்.
கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி ஜகத் தேசாய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றார். தற்போது சினிமாவை ஓரங்கட்டிவிட்டு கணவன் மற்றும் குழந்தையுடன் அமலா பால் நேரம் செலவிட்டு வருகின்றார்.
அமலா பால் ஓபன் டோக்
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமலா பால் தனது கணவர் ஜகத் தேசாய் பகிர்ந்திருக்கிறார். அதன் போது அமலா பால் குறிப்பிடுகையில்,
"முதன் முதலில் நானும் ஜகத்தும் கோவாவில் சந்தித்தோம். அவர் குஜராத்தி என்றாலும் கோவாவில்தான் வசித்து வந்தார். அவருக்கு தென்னிந்தியப் படங்களைப் பார்க்கும் பழக்கம் இல்லை.
அதனால் நான் ஒரு நடிகை என்பது அவருக்கு தெரியாது. நானும் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு பிறகுதான் அவருக்கு தெரிய வந்தது. நான் கர்ப்பக்காலத்தில் இருக்கும்போதுதான் என்னுடையப் படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார்.
அவருக்கு விருது நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். நான் விருது விழாவிற்கு சென்று விருது வாங்குவதையும், ரெட் கார்ப்பட்டில் நடப்பதையும் அவர் மிகவும் வியப்பாகப் பார்த்தார்" என்று தனது கணவர் ஜகத் தேசாய் குறித்து அமலா பால் வெளிப்படையாக பேசியுனள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |