காதலனுடன் ரகசியமாக 2வது திருமணம்! அமலா பாலின் ஓணம் கிளிக்ஸ்
நடிகை அமலா பாலுக்கும், அவரது நண்பரான பவ்நிந்தர் சிங்குக்கும் திருமணம் நடந்தது உறுதியான நிலையில், ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஏமாற்றிவிட்டதாக புகார்
மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் அமலா பால், ஏற்கனவே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது மீண்டும் திருமண சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது, இவரது நண்பரான பவ்நிந்தர் சிங்குடன் சேர்ந்து திரைப்பட நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்துள்ளார்.
இதற்காக இருவரும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திரைப்பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இதற்கிடையே பவ்நிந்தர் சிங் தன்னை ஏமாற்றி விட்டதாக அமலாபால் புகார் அளிக்க, பவீந்தர் சிங் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்தனர்.
2வது திருமணம் செய்தது உறுதி
இதனையடுத்து வானூர் நீதிமன்றத்தில் பவ்நிந்தர் சிங் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
அவரது மனு விசாரணைக்கு வந்த போது அமலா பாலுக்கும் தனக்கு நடந்த பதிவுத் திருமண சான்றிதழை பவீந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
7.11.2018ல் பஞ்சாப் மாநிலம் புஷ்கரில் உள்ள ராதிகா பேலஸில் திருமணம் நடந்ததாக ஆதாரத்துடன் மனு அளித்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அமலா பால் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட வைரலாகி வருகிறது.