அமலா பால் வீட்டில் நடந்த திருமணம்: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி
சர்ச்சை இயக்குனர் சாமி இயக்கிய சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால்.
பின்பு பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் இவர், கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், மூன்றே ஆண்டுகளில் இவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் கடந்த ஆண்டு பவீந்தர் சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இவர் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர மலையாளப்படங்களிலும் நடித்து வரும் அமலாபால், உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அமலா பாலின், தம்பி அபிஜித் பாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும், தனது தம்பியையும், அவர் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணையும் அறிமுகப்படுத்தி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.