அம்மான்னா இப்படி தான் இருக்கணும்... ஆல்யா மானசா குழந்தைகளுடன் பார்த்த வேலை!
சீரியல் நடிகை ஆல்யா மானசா படப்பிடிப்புக்கு மத்தியிலும், தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட தவறுவதே கிடையாது. அந்தவகைளில்,ஜாலியாக குழந்தைகளுடன் சூரிய அஸ்தமனத்தை பார்த்து மகிழும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆல்யா மானசா- சஞ்சீவ்
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி.

சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

ஆல்யா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும், பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகின்றார். இந்த தொடரில் இசை என்ற கதாப்பாத்திரத்தில் காது கேளாத பெண்ணகாக நடித்துவருகின்றார்.

படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அழகிய தருணங்களை மிஸ் பண்ணாத நடிகை நயன்தாரா போல் ஆல்யா மானசாவும் சிறந்த அம்மாவுக்கு உதாரணமாக திகழ்கின்றார்.

இந்நிலையில், குழந்தைகளுடன் ஆல்யா மானசா Sunset பாத்து மகிழ்ந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |