பத்து கிலோ உடல் எடை குறைத்து சூப்பராக மாறிய ஆல்யா! அதற்கு சஞ்சீவ் என்ன கொடுத்தார் தெரியுமா?
சின்னத்திரையில் பிரபலங்களான ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளனர்.
ஆல்யா மானசாவின் சினிமா பயணம்
ஆல்யா மானசா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். மேலும் அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இவருக்கு ஐலா என்ற மகளும், அர்ஸ் என்ற மகனும் இருக்கிறார்கள். தொடர்ந்து இவரது மகன் பிறந்ததுக்கு பிறகு சின்னத்திரையை விட்டுவிலகியிருந்தார்.

கம்பேக் கொடுக்கும் ஆல்யா
ஆனால் தற்போது சன்டிவியின் மெகா சீரியலில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக பத்து கிலோகிராம் எடையை 2 மாதங்களில் குறைத்துள்ளதாகவும் சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகி வருகிறது.