ஆல்யா மானசா வீட்டுக்கு வந்த புது வரவு! சுத்தி போடுங்க... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குழந்தையுடன் வரவேற்ற அழகிய குடும்பம்!
ஆடம்பரமான புதிய காரை வாங்கியுள்ள சஞ்சீவ் - ஆல்யா, தங்கள் வீட்டிற்கு ஒரு புதிய Beast வந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரையில் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி நட்சத்திர தம்பதிகளாக உள்ளனர். பிரபல ஹீரோ மற்றும் ஹீரோயின் பட்டியலை எடுத்தால், அதில் நிச்சயம் இருவருக்கும் இடம் இருக்கும்.
சீரியலில் பிரபலமாக இருக்கும் இருவருக்கும் அண்மைக்காலமாக காரின் மீது அலாதி பிரியம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், கடந்த ஆண்டு மார்ச் மாதம், அதாவது மகள் ஐலா பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் ஆடம்பர காரான பென்ஸை வாங்கினர்.
பின்னர், மகள் பிறந்நாளுக்காக மற்றொரு காரை வாங்கியிருந்தனர். அந்தவகையில் தற்போது மூன்றாவதாக கியா கார்னிவெல் (Kia Carnival) காரை வாங்கியுள்ளனர்.
கார் வாங்கிய மகிழ்ச்சியை, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள இருவரும், தங்கள் வீட்டிற்கு புதிய Beast வந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த மகிழ்ச்சியான பதிவுக்கு ரசிகர்களும் வாழ்த்துகளையும், அன்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.