ஆல்யா- சஞ்சீவ் சண்டை: அப்பறம் நடந்தது என்ன தெரியுமா?
சின்னத்திரையுலகில் காதல் ஜோடியாக வலம் வரும் ஆல்யா மானசா- சஞ்சீவ் ஜோடி தங்கள் வாழ்வில் நடந்த கஷ்டமான நிலையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ராஜா ராணியில் மலர்ந்த காதல்
ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் நண்பர்களாக பழகி காதலர்களாக மாறியவர்கள் சஞ்சீவ்- ஆல்யா மானசா ஜோடி.
இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பல எதிர்ப்புகளை தாண்டி திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு அய்லா, அர்ஷ் என இரு குழந்தைகள் இருக்கின்றனர், இந்நிலையில் தங்கள் காதல் வாழ்வில் நடந்த மோசமான சம்பவம் பற்றி பேசியுள்ளார் ஆல்யா.

காதல் பிரேக் அப்
ராஜா ராணி தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே, காதலில் விரிசல் விழ இருவரும் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டாராம் ஆல்யா.
இந்த சீரியலில் இருந்து அவரை தூக்கினால் தான் நான் நடிப்பேன் என இயக்குனரிடம் அடம்பிடித்துள்ளார்.
இதற்காக சற்றும் பதிலளிக்காமல் மிக அமைதியாக இருந்த சஞ்சீவின் குணம் பிடித்துப்போக, நான் வேண்டுமென்றால் சீரியலை விட்டு சென்று விடுகிறேன் என கூறியுள்ளார் ஆல்யா.
சில நாட்களில் சஞ்சீவை புரிந்து கொண்ட ஆல்யா, மன்னிப்பு கேட்டு சேர்ந்துள்ளார், இதற்கான தண்டனையாக நடுரோட்டில் நின்று ஐ லவ் யூ சொல்லுமாறு கூறியுள்ளார் சஞ்சீவ்.
ஆல்யாவும் அதை சிறப்பாக செய்துவிட, காதல் கல்யாணத்தில் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக நெகிழ்கிறார்கள்.
