ராஜா ராணி சித்துவைப் பற்றி ஆல்யாவிடம் கேட்ட கேள்வி... இவனைப் பத்தி சொல்லனும்னா என்று ஆரம்பித்த கலக்கலான பதில்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது. இதன் முதல் பாகத்தில் ஆல்யா, சஞ்சீவ் நடித்துள்ள நிலையில், இவர்கள் காதலர்களாக மாறி தற்போது திருமணம் செய்து பெண் குழந்தை ஒன்றுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தில் ஆல்யா கதாநாயகியாகவும் இவருக்கு ஜோடியாக நடிகர் சித்து நடித்து வருகின்றார்.
இவர்களின் நடிப்பும் மக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தற்போது இந்த சீரியலில் காரில் செல்வது போன்று காட்சிகள் படமெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பயணித்த ஆல்யா மற்றும் சித்துவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆல்யா மற்றும் சித்து என்ன பதில் அளித்துள்ளனர் என்பதைக் காணொளியில் காணலாம்.