அடுத்தடுத்து மாஸ் தான் ... Benz கார் வாங்கிய ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி: வைரலாகும் காணொளி
பிரபல சீரியல் ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இணைந்து புதிய பென்ஸ் கார் ஒன்றை வாங்கி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இவர் அதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
அதனை தொடர்ந்து தங்களது தொழிலில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருகின்றார்.
சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடி தான் டாப்பில் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.
முதல் தொடரே ஆல்யாவிற்கு வெற்றிகரமாக அமைய அடுத்தடுத்து ராஜா ராணி 2, இனியா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.
அண்மையில் தனது கணவருடன் இணைந்து புதிய வீடு கட்டியவர் தற்போது கேரளாவில் ஒரு போட் ஹவுஸையும் வாங்கியுள்ளார், அதன் விலை ரூ. 2 கோடி என்ற தகவல் அண்மையில் இணையத்தில் வைரலாகியதுடன் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களும் குவிந்தது.
இந்த ஆரவாரம் தணியும் முன்னரே தற்போது புதிய காரை வாங்கி மாஸ் காணொளியை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |