தாறுமாறாக உயர்ந்த ஆல்யா மானசாவின் சம்பளம்! ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
நடிகை ஆல்யா மானசா புதிய தொலைக்காட்சி தொடருக்காக வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.
இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
புதிய தொடரில் களமிறங்கிய ஆல்யா
குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே எடையை குறைத்து மீண்டும் சீரியலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகின்றார்.
விஜய் டிவியில் நடித்து வந்த போது ஆல்யா மானசாவுக்கு 12 முதல் 15 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவளை, சன் டிவிக்கு மாறியதும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.