சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு உடலில் இப்படியொரு பிரச்சினையா? கவலையில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரை நடிகைகளுள் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆல்யா மானசாவுக்கு உடலில் இப்படியொரு பிரச்சினையிருப்பதாக சமீபத்திய பேட்டியொன்றில் அவரே குறிப்பிட்டுள்ள விடயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான வலம் வருபவர் தான ஆல்யா மானசா. இவரைப் பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.காரணம் முன்னணி நாயகி என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருக்கும் நாயகியே இவர்தான்.

நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் நாயகியாக களமிறங்கியவர் பின் ராஜா ராணி 2, இனியா போன்ற தொடர்களில் நடித்து தற்போது பீக்கில் இருக்கின்றார்.
ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

அதுமாத்திரமின்றி ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானி வரும் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாரிஜாதம் என்ற தொடரிலும் நடித்து வருகின்றார். இந்த தொடரில் இசை என்ற கதாப்பாத்திரத்தில் காது கேளாத பெண்ணகாக நடித்துவருகின்றார்.

ஆல்யா மானசா ஓபன் டாக்
சமீபத்திய பேட்டியொன்றி ஆல்யா மானசா குறிப்பிடுனையில், நிஜத்திலும் எனக்கு காது கொஞ்சம் சரியாக கேட்காதாது என குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக காதே கேட்காது என்று சொல்லிவிட முடியாது, யாராவது பேசினால் அதற்கு என்னால் உடனடியாக பதில் அளிக்க முடியாது.
என்ன சொன்னீங்க என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுவிட்டு பதில் சொல்லிவிடுவேன், இது எனக்கு சிறுவயதில் இருந்தே நடக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |