எனக்கு நான் தான் கேப்டன் - 7 ஆண்டு பதவியை பற்றி மெளனம் கலைத்த விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் வீரர்களும் சோகத்தில் மூழ்கினர்.
இவரின் 7 ஆண்டுகால கேப்டன் பதவி சகாப்தம் முடிவடைந்த நிலையில், பழைய பேட்டிங் திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில், விராட் கோலி அண்மையில் பேசுகையில், எனக்கு நான் மட்டுமே கேப்டன் என தெரிவித்து இருக்கிறார். எதற்குமே கால அவகாசம் உள்ளது. அதை நாம் எப்போதுமே உணர்ந்திருக்க வேண்டும். நாம் என்ன சாதித்து விட்டோம் என மற்றவர்கள் விமர்ச்சிக்கலாம்.

ஆனால், முன்னேற்றத்தையும், சாதனைகளையும் நாம் எட்டும் போது வேலையை சரியாக செய்திருக்கிறோம் என்று நமக்கு தெரியவரும். தற்போது நான் ஒரு பேட்ஸ்மேனாக அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய முடியும்,.
பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவேன். அதனால், எனக்கு கிடைக்கும் பெயர் போதுமானது. இதற்காக நான் கேப்டனாக இருக்க வேண்டியது இல்லை. அணியின் வளர்ச்சிக்காக அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்ந்து டோனி கேப்டன் பதவியை என்னிடம் வழங்கினார்.
அதே மனநிலையில்தான் நானும் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.
தகுந்த நேரத்தில் முடிவுகள் எடுத்து அடுத்த கட்டத்துக்கு செல்வதும் தலைமை பண்பின் குணம் தான். நான் எப்போதுமே எனக்கு கேப்டனாகவே இருக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார்.