உடலின் சூட்டை வெகு விரைவில் இல்லாமல் செய்ய முடியுமா? இந்த பொருள் போதும்
உடலில் உள்ள சூடு பல நோய்களை உடலின் உள்ளே கொண்டு வரும். எனவே இந்த உடல் சூட்டை எவ்வாறு குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும்.
பாதாம் பிசின்
உடலில் பாதிப்பு இருந்தாலும் இந்த பாதாம் பிசின் அதற்கு சிறந்த நிவாரணம் தரும். கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உடல் சூட்டை தணிப்பதற்கு உதவினாலும் கூடுதலாக ஒரு சில விஷயங்களை நமது அன்றாட உணவில் சேர்ப்பது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்விக்க உதவும்.
அந்த வகையில் உடலை குளிர்விக்க பயன்படுத்தப்படும் பாதாம் பிசினின் பலன்கள் ஏராளமானவை.
ஒன்று அல்லது இரண்டு துண்டு பாதாம் பிசின் எடுத்து அதனை கழுவி ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் பொழுது, அது ஜெல்லி போல மாறுகிறது. இது நமது உடலின் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது.
இந்த பாதாம் பிசினில் பல வேலைகள் இருக்கி்னறன. இதை தினம் தினம் நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்லாம்.
மில்க் ஷேக், ஃபலூடா அல்லது தயிர் போன்ற இனிப்பு வகைகளோடு ஊற வைத்த பாதாம் பிசினை சேர்த்து சாப்பிடுவது அதன் சுவையை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |