கண்கள் கருவளையத்தால் அசிங்கமாக உள்ளதா?பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க
கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை.
மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம்.
புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.
கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
கருவளையம்
பாதாம் விதைகளை நாம் உண்ணும் போது அது உடலுக்கு நிறைய சத்துக்களை தருகின்றது.இதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுத்து அதை இயற்கை முறையில் உடல் பாகத்தில் பூசும் போது அது உடலுக்கு தேவையான அனைத்தையும் தருகிறது.
இந்த எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் ஈ வைட்டமின் டி மிகவும் முக்கியமாகும்.இதில் இருக்கும் கொழுப்பமிலங்கள் உடலுக்கு மிகவும் தேவையானதாகும்.இதனால் தான் இரு இன்றுவரை இது அழகு பராமரிப்பில் இருந்து வருகின்றது.
இதிலிருக்கும் சிறந்த மூலமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோலுக்கு மிகவும் முக்கியமானதாகும்.இது தான் கருவளையத்தையும் குறைக்க உதவுகிறது.பாதாம் எண்ணெயில் காணப்படும் நீரேற்றபண்புகள் சருமத்தை மென்மையாகவும் மென்மையான இடங்களையும் பாதுகாக்க உதவுகிறது.
இந்த எண்ணெயை படுக்கைக்கு செல்லும் முன் கண்களுக்கு கீழே தடவி மசாஜ் செய்ததன் பின்னர் வகை்க வேண்டும்.இந்த மசாஜ் கண்களை சுற்றியுள்ள எரிச்சலை தடுத்து மென்மையாக இருப்பதற்கு வழி வகுக்கும்.ரத்த ஓட்டத்தை மேம்மிபடுத்தி சருமத்தில் ஒரு பொலிவான தன்மையை கொடுக்கிறது.
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
பாதாம் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு, நோயெதிர்ப்பு பண்புகள் மற்றும் ஹெபடோடாக்ஸிக் குணங்கள் உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் இது சருமத்தில் காணப்படும் அனைத்து பிரச்சைனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |