உடல் எடையைக் குறைக்க பாதாமை எப்படி சாப்பிட வேண்டும்?
உடல் எடையைக் குறைப்பதற்கு பாதாமை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை அதிகரித்து காணப்படுவதால், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உணவுப்பழக்க வழக்கம், வாழ்க்கை முறை இவைகளின் மாற்றத்தினால் உடல் எடை கடகடவென அதிகரித்துவிடுகின்றது.
ஆனால் பின்பு உடம்பைக் குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்தும் வருகின்றனர். ஆனால் உடல் எடையைக் குறைப்பதற்கு பாதாம் எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
எடை இழப்புக்கு பாதாமின் நன்மைகள்:
எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட பாதாமில் அதிக கலோரிகள் காணப்படுவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவி செய்கின்றது.
பாதாம் பருப்பை உட்கொள்வதினால் மனநிறைவு ஏற்படுவதுடன், ஆரோக்கியமற்ற உணவினை அடிக்கடி எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
பாதாமில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் பசியை கட்டுப்படுத்துகின்றது. சர்க்கரையின் அளவை நிலைப்படுத்தவும் உதவி செய்வதுடன், எடையை குறைக்கவும் செய்கின்றது.
வளர்சிதை மாற்றம் உகந்ததாக செயல்படும் போது உணவு கொழுப்பிற்கு பதிலாக ஆற்றலாக மாற்றப்படுவதால் இந்த எடைகுறைப்பு கிடைக்கின்றது.
பாதாமை பச்சையாக சாப்பிடாமல் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்ததாகும். அதிலும் அதன் தோலை அகற்றுவதற்கு நீங்கள் மறக்க வேண்டாம். ஊற வைத்த பாதாமில் தோலை உறிக்காமல் அப்படியே சாப்பிடலாமாம்.
[
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |