செவ்வாய் கிரகத்தில் ஏலியனா? காணொளியில் சிக்கிய உருவம்
நாசாவின் மார்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் எடுத்ததாக வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று மனிதர்கள் அங்கு வாழ தகுதியான உயிர் ஆதாரங்கள் இருக்கலாம் என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவ்வப்போது வானில் பறக்கும் மர்ம பொருட்கள், விண்கல் இவற்றினை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருவதுடன், வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கின்றனரா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.
இவ்வாறான பொருட்களை ஆராய்ச்சி செய்து வரும் ஸ்காட் சி வேரிங் என்பவர் தன்னுடைய இணையதளத்தில் செவ்வாய்கிரகத்தில் ஏலியன் இருப்பதாக கூறியுள்ளார்.
அதில் அண்டார்டிக் பகுதியில் இதய வடிவிலான இடைவெளிக்குள் இருந்து தனக்கு கிடைத்த டிஸ்கை ஆய்வு செய்து பார்த்ததாகவும், அதில் ஏப்ரல் 2021ல் ரோவர் எடுத்த படங்களை கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் பாறை மீது மனிதர் ஒருவர் படுத்திருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதால், இதனை அவதானித்த பலரும் செவ்வாய் கிரகத்தில் ஏலியன் இருப்பதாக கூறிவருகின்றனர்.
ஆனால் இது மிகப்பெரிய கண்டுபிடிப்போ, ஆராய்ச்சியில் அடுத்த கட்ட முன்னேற்றமோ கிடையாது. ஏற்கனவே பலமுறை செவ்வாய் கிராகத்தில் உயிர்கள் இருப்பதாக மக்களை நம்ப வைக்க செய்யப்பட்ட கண்கட்டி வித்தைகளில் ஒன்று என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.