10 வயது சிறுமிக்கு அபாயகரமான சேலஞ்ச் விடுத்த Alexa: ஷாக்கிங் தகவல்
10 வயது சிறுமிக்கு Alexa Voice Assistant அபாயகரமான சேலஞ்ச் விடுத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, மின் இணைப்புள்ள வயரில் நாணயத்தை கொண்டு தொட கூறி இருக்கிறது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
சிறுமி முதலில், எனக்கு ஏதேனும் சவால் விடு என Alexaவிடம் கேட்டிருக்கிறார், இதற்கு பதிலளிக்கும் விதமாக, நான் இணையத்தில் ஒன்றை கண்டறிந்தேன்.
வலைதளத்தின் படி சவால் மிகவும் எளிமையானது தான். பவர் பிளக்-இல் போன் சார்ஜரை சொருகி, அதன் மறுமுனையில் நாணயம் ஒன்றை வைக்கவும் என பதில் அளித்துள்ளது.
இதை வைத்து Alexa சிறுமியிடம் அவ்வாறு கூறியிருக்கலாம் என தெரிகிறது, இதுகுறித்து தெரிந்ததும் உடனடியாக சிறுமியின் பெற்றோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய அமேசான், 'இதுபற்றிய தகவல் கிடைத்ததும், அதனை சரிசெய்யும் முயற்சியை துவங்கிவிட்டோம்,' என தெரிவித்துள்ளது.