அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மிரள வைத்த காளைகள் - Alanganallur Jallikattu 2023 Highlights
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நேற்று நடந்தது.
இப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
போட்டி தொடங்கியதும் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 முதல் 40 வீரர்கள் களமிறக்கப்பட்டனர், இதில் 26 காளைகளை அடக்கிய அபிசித்தர் என்பவர் முதல் பரிசை தட்டிச்சென்றார், இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
அடுத்ததாக 20 காளைகளை அடக்கிய அஜய் என்பவருக்கு 2வது பரிசாக மோட்டார் சைக்கிளும், 12 காளைகளை அடக்கி 3-வது இடம் பிடித்த ரஞ்சித்துக்கு மொபட்டும் பரிசாக வழங்கப்பட்டது.
இப்போட்டியின் சிறந்த தருணங்களை வீடியோவாக பார்க்கலாம்,