தம்பியை வாழ்த்திய அண்ணன்! பதவியேற்பு விழாவில் நடக்கும் திருப்பங்கள்- குடும்பம் ஒன்று சேர்கிறதா?
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நாளை பதவி ஏற்கும் நிலையில், அவரது அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்து கூறியுள்ளார்.
கலைஞரின் வாரிசான மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் இருவருக்குள்ளும் இடையே பிரச்சினைகள் நிலவி வந்தது.
ஆம் இருவரில் அரசியல் வாரிசு யார் என்ற சலசலப்பே இவர்களின் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதில் சில இடங்களில் ஸ்டாலினை விமர்சித்து அழகிரி பேசி வந்ததோடு, தனியாக கட்சி ஆரம்பிக்கவும் முயற்சித்ததாக கூறப்பட்டது.
பின்பு குடும்ப உறுப்பினர்கள் இருவரிடமும் பேசி சமரசம் செய்த பின்பு அழகிரி கட்சி துவங்கும் எண்ணத்தினைக் கைவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
சமீபத்தில் அழகிரி குறித்து ஸ்டாலினிடம் கேட்ட போது, மிகவும் பெருமையாக அவர் எனது அண்ணன் என்று கூறி அனைவரின் கவனத்தினையும் தன்பக்கம் ஈர்த்தார்.
இந்நிலையில் தி.மு.க தலைவராக ஸ்டாலின் நாளை பதவி ஏற்கவிருக்கும் நிலையில், அரசிகல் பிரமுகர்கள், பிரபலங்கள், வட மாநில தலைவர்கள் என வாழ்த்துக்களை குவித்து வரும் நிலையில், ஸ்டாலினின் அண்ணனான மு.க.அழகிரி தனது தம்பிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அழகிரி கூறுகையில், முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். என் தம்பி பதவியேற்பதில் பெருமை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நாளை பதவி ஏற்பிற்கு மு.க.அழகிரிக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின்.
மேலும் இந்த பதவி ஏற்பு விழாவில் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீப நாட்களாக பிரிந்திருந்த குடும்பம் தற்போது தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்கும் போது, குறித்த விழா மூலம் ஒன்று சேரவுள்ளதாக வெளியான தகவல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.