83 வயது நடிகர் 29 வயது காதலியுடன் இணைந்து பெற்ற முதல் குழந்தை!
83 வயது நடிகர் ஒருவர் 29 காதலியுடன் இணைந்து நான்காவது குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண வாழ்க்கை
ஹொலிவுட்டில் நடிகராக வலம் வரும் அல் பசினோ கடந்த 1988ம் ஆண்டு “ஜன் டரன்ட்” என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ஒரே வருடத்தில் பிரிந்து விட்டார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த 1997ம் ஆண்டு “பிவர்லி டி ஏஞ்சலோ” என்ற நடிகையை திருமணம் செய்தார். இவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.
இதற்கடுத்தபடியாக கடந்த 2008ம் ஆண்டு “லூசிலா போலக்” என்பவரை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றார். இவரையும் கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார்.
4வது காதலிக்கு 4வது குழந்தை
இந்த நிலையில் 29 வயதே ஆன நடிகை “நூர் அல்ஃபலா” என்பவரை காதலித்து வருகிறார்.
இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை ஆனாலும் நான்காவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த செய்தியை பார்க்கும் சற்று வியப்பாக தான் இருக்கின்றது.
ஒரு பெண்ணை திருமணம் செய்ய வழியில்லாமல் இளைஞர்கள் திரியும் நேரத்தில் இவர் 83 வயது வரை திருமணம் செய்து வந்திருக்கிறார் என்பது சற்று அதிர்ச்சியாக இருக்கின்றது.
செய்தியை கேள்விபட்டவர்கள் , 4வது காதலிக்கு 4வது குழந்தை பிறந்த நிலையில் வாழ்த்துக்கள் குவித்து வருகிறார்கள்.