ஆரம்பமாகும் அட்சய திருதியை... அதிர்ஷ் மழையில் நனையும் 4 ராசிகள்
அட்சய திருதியை வரும் 19ம் தேதி வரும் நிலையில், குபேர யோகம் பெற்ற நான்கு ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அட்சய திருதியை
அட்சய என்பதற்கு குறையாதது அல்லது வளரக்கூடியது என்று பொருள் ஆகும். இந்த ஆண்டில் ஏப்ரல் 19ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பலமடங்கு அதிகமாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
ஆதலால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் இருப்பதால், இந்நாளில் தங்கத்தினை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நாளில் மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருப்பதால் குபேர யோகத்துடன் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த அட்சய திருதியை தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தினை அளிப்பதுடன், பதவி உயர்வும் உங்களை தேடி வரும் என்று கூறப்படுகின்றது.
புதிய பொறுப்புகளையும், தொழிலை விரிவுபடுத்துவதற்கு இந்த நேரம் நல்ல நேரமாகவும் இருக்கின்றது. பொருளாதார ரீதியிலும் பணவரவு உங்களுக்கு அதிகரிக்கவும் செய்கின்றது.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு சந்திரன் உச்சம் பெற்று இருப்பதாலும், சுக்கின் ஆதிக்கம் இருப்பதாலும் இந்த அட்சய திருதியை மிகச்சிறப்பாக இருக்குமாம்.
உங்களது நிதி மேலாண்மை சிறப்பாகவும், எதிர்பாராத வழிகளில் இருந்து வருமானம் பெறுவதுடன், வெற்றியும் உங்களை தேடி வருமாம். வீட்டில் ஒற்றுமை மேம்படுவதுடன், குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த அட்சய திருதியை பொன்னான தருணமாக காணப்படுகின்றது. அனைத்து வழிகளிலும் அதிர்ஷ்டம் கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக முடியாத வேலைகள் முடிவிற்கு வரும்.
தொழிலில் புதிய ஒப்பந்தம் மற்றும் மிகப்பெரிய லாபத்தையும் பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்குமாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த அட்சய திருதியை பொன்னான பலனை கொடுப்பதுடன், நிதித்துறையிலும் சிறந்த பலன்களை பெறுவார்கள்.
புதிய வருமான வழிகள் கிடைப்பதுடன், குடும்ப சொத்து தொடர்பான பிரச்சனையும் முடிவிற்கு வரும். பழைய முதலீடு லாபத்தை கொடுக்கும்.
வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கின்றது. முக்கியமாக கடன் சுமைகள் குறைவதுடன், எதிர்பார்க்காத ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளிலிருந்து வருமானமும் வரத் தொடங்குமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |