பிரபல நடிகரின் தாயார் திடீர் மறைவு! கண்ணீருடன் அவர் வெளியிட்ட பதிவு!
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா உடல்நலக்குறைவால் இருந்து வந்த நிலையில் தற்போது மறைந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90-க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். 2008-ல், கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அவருக்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இதனிடையே, சிண்ட்ரெல்லா என்ற படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அக்ஷய் குமாருக்கு அவரது தாயார் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அக்ஷய் குமார், ஷூட்டிங்கை பாதியில் நிறுத்துவிட்டு இந்தியா விரைந்துளார். அக்ஷ்ய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில். தாயார் தான் எனக்கு அனைத்துமாக இருந்தார்கள். எனக்கு தீராத வலியைக் கொடுத்துட்டு, இன்றைக்கு காலையில் அம்மா, அப்பாவோட உலகத்துக்கு சென்று விட்டார்கள் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கும், என் குடும்பத்திற்கும் ரசிகர்கள் உங்கள் ஒவ்வொருவரின் வேண்டுதலும் உதவியாக இருக்கும். என்னோட எல்லா நேரத்துலயும் கூட இருந்து அவங்களுக்காக வேண்டிக்கிட்ட எல்லோருக்கும் நானும் என் குடும்பமும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் " எனக் குறிப்பிட்டுள்ளார்.