ஜோடியாக வெளியேறிய அக்ஷரா, வருணிற்கு அடித்த ஜாக்பாட்: தீயாய் பரவும் தகவல்
பிக்பாஸிலிருந்து ஜோடியாக வெளியேறிய அக்ஷரா வருண் இருவருக்கும் சினிமாவில் ஜாக்பாட் அடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பப்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள வருணும், மாடலாக இருந்த அக்ஷராவும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதோடு, இருவரும் ஒரே வாரத்தில் ஜோடியாக வெளியேறினர்.
அழகான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தினை காட்டிய அக்ஷராவிற்கும், தன்னிச்சையாக விளையாடிய வருணுக்கும் வெளியே ரசிகர்களிடம் நல்ல பெயரே இருக்கின்றது.
பிக் பாஸ் வீட்டில் அதிகமாக யாருடனும் பேசாமல் பிரச்சனை வரும் போதெல்லாம் அழுது கொண்டு இருந்த அக்ஷராவுக்கு துணையாக இருந்தது வருண் மட்டுமே. அதன் பின்பு இருவரும் இணைபிரியா நண்பர்களாகிவிட்டனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இவர்கள் இருவரும் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வருணின் பப்பி, ஜோஷ்வா இமை போல் காக்கா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கப் போவதில்லை என்றும் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் இந்த இருவரையும் வைத்து படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஐசரி கணேஷ் வாய்ப்பு தர போவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.