வருணுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன் தெரியுமா? போட்டுடைத்த அக்ஷரா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது நடிகர் வருணுக்கு முத்தம் கொடுத்தது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் அக்ஷரா ரெட்டி.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் வெல்வார்கள் என்பதை கணிக்க முடியாத சூழலே உள்ளது.
12 லட்சத்தை எடுத்துக் கொண்டு சிபி வெளியேறியுள்ளார், இந்த சீசனில் பல சர்ச்சைகளும், சண்டைகளும் அரங்கேறின.
மிக முக்கியமாக அமீர் பாவனியை காதலிப்பதாக கூறியது, அக்ஷரா வருணுக்கு முத்தம் கொடுத்ததை குறிப்பிடலாம்.
இந்த விடயங்கள் வைரலான நிலையில், வருணுக்கு முத்தம் கொடுத்தது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் அக்ஷரா ரெட்டி.

அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள கமெராக்கள் நம்மை பார்த்துக் கொண்டே தான் இருக்கும், யாரும் கீழ்த்தரமான வேலைகளை செய்துவிட முடியாது.
நான் எப்போதும் காலையில் எழுந்து எனக்கு பிடித்தவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம்தான்.
அண்ணாச்சி, சின்னப்பொண்ணு, தாமரை என்று பலர் இருக்கிறார்கள், அதுபோலத்தான் அன்று காலையும் வருணின் தலையில் முத்தம் கொடுத்தேன்.
அதுவும் அவர் கட்டியிருந்த ஸ்கார்ப் மீது தான் முத்தம் கொடுத்தேன், பல நேரங்களில் உள்ளே நடப்பதும், வெளியே காட்டப்படுவதும் வேறு மாதிரியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.