அடேங்கப்பா இளைய பொண்ணுக்கே இவ்வளவா! அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் அக்ஷரா ஹாசனின் முழு சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவர் தான் கமல்ஹாசன்.
இவர் நடிப்பில் “ இந்தியன 2 ” திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் சங்கர் இயக்குகிறார்.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்காக கமல்ஹாசன் 130 கோடி சம்பளமாக வாங்கிறாராம். இவரின் மனைவி சரிதாவிற்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களின் இளைய மகள் பெயர் தான் அக்ஷரா ஹாசன்.
அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு
இந்த நிலையில் அக்ஷரா ஹாசன் ‘ஷமிதாப்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்தார். இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சனும் – தனுஷும் இணைந்து நடித்திருந்தார்கள்.
இதனை தொடர்ந்து ‘லாலி கி ஷாதி மெயின் லாட்டூ தீவானா (ஹிந்தி), விவேகம் (தமிழ்), கடாரம் கொண்டான் (தமிழ்)’ என படங்கள் குவிந்தது. இதன் பிறகு ‘ஃபிங்கர்டிப்’ என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.
அக்ஷரா ஹாசன் இன்றைய தினம் அவரின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இவரின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அக்ஷரா ஹாசனிடம் சுமாராக 45 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
கமல்ஹாசன் தன்னுடைய சிறு வயதிலிருந்து சினிமாவில் இருக்கிறார் இவ்வளவு தான் சொத்து வைத்திருக்கிறாரா? என்பது சரியாக தெரியவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |