பேக்கிங் சோடாவை இட்லி, தோசை மாவில் சேர்த்தால் என்ன பக்கவிளைவுகள் வரும் தெரியுமா?
பேக்கிங் சோடா ஒரு சமயலறை பொருளாகும். இதை பல உணவுகள் செய்ய பயன்படுத்துவார்கள். இது ஒருவகை உப்பாகும்.
இதை பெண்கள் சருமப்பொலிவிற்காகவும் பயன்படுத்துவார்கள். இதற்காக இதை ப்ளீச்சிங் கண்டிஷனர் என்று அழைப்பார்கள். இந்த பேக்கிங் சோடாவை இட்லி, தோசை மாவில் அது பொங்கி வருவதற்காக சேர்க்கின்றனர்.
இப்படி இந்த பேக்கிங் மாவை சேர்ப்பதனால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பேக்கிங் சோடா
உளுந்துவடை, இட்லி, தோசை போன்ற உணவுகள் செய்ய மாவு அரைக்கும் போது அதில் பேக்கிங் சோடா சேர்க்கப்படுகிறது. இப்படி சேர்ப்பதால் இட்லி மிகவும் மென்மையாக பூ போல வரும்.
ஆனால் இப்படி சேர்ப்பதால் உடலில் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவரால் அறிவுறுத்தப்டுகிறது. இதற்கான காரணம் இந்த பேக்கிங் சோடா காரத்தன்மை வாய்ந்தது.
இதனால் நமது ரத்ததின் காரத்தன்மையை இது மாற்றக்கூடியது. ரத்தித்தில் காரத்தன்மை அதிகரித்தால் அது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
இதில் உள்ள சோடியம் பைகார்பனேட் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படும். கல்லீரல் சர்க்கரையை கொழுப்பாக மாற்றிவிடும் சக்தி இந்த சோடாவிக்கு உண்டு.
இதில் இருக்கும் பாஸ்போரிக் ஆசிட் எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்ககூடியது.
எனவே பேக்கிங் சோடாவை பயன்படுத்தாமல் ஆராக்கியமான முறையில் உணவுகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |