பரிகாரம் என்றால் பொய்யா ? பரிகாரத்தால் நடந்த சில அதிசயம்
பரிகாரத்தால் நடந்த சில அதிசயங்களை பற்றி ஜோதிடர் அகில் சித்தார்த் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
ஒரே மருந்து மாத்திரையை எல்லாரும் சாப்பிட முடியாது. கோவிலும் அப்படித்தான். சில கோவில்கள் எல்லாரும் போகக்கூடியதாக இருக்காது. சில கோவில்கள் எல்லாரும் போகக்கூடியதாக இருக்கும். சில மாத்திரைகளை யாரு வேண்டுமானாலும் போடலாம். சில மாத்திரைகளை அந்த பிரச்சினை உள்ளவர்கள்தான் போட வேண்டும்.
உங்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்றால் அந்த கோவிலுக்குப் போங்க. பிரச்சினை இல்லாத ஆட்கள் அங்கு போனால் உங்களுக்கு பிரச்சினைதான் வரும். சில பேர் என்ன செய்வார்கள் என்றால் சில கோவில்களில் எல்லாரும் போகலாம் என்று கூறி அவஸ்தைப்பட்டு வருவார்கள்.
திருப்பதி கோவில் எல்லாருக்கு நல்லபடியாக அருள் கொடுத்திருக்கிறது. ஆனால் சில பேருக்கு அந்த கோவிலால் அசௌகரியமான விஷயங்கள் நடக்கும். அதனால், உங்கள் ஜாதகத்தைப் பார்த்து நீங்கள் திருப்பதி போறதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். இதையும் நீங்கள் திருப்பதிக்குச் சென்று பல விஷயங்களை இழந்து திரும்பி வந்திருக்கிறார்கள்.
அது ஒவ்வொரு ஸ்தலமும் பயங்கர வீரியம் மிகுந்தது. சில பேருக்கு மட்டும்தான் சித்த வழிபாடு சரியாக இருக்கும். மற்றவர்களுக்கு சித்த வழிபாடு செய்தால் சில சிரமங்கள் ஏற்படும். நாம் சரியான பரிகாரங்கள் செய்தால் சரியான வழியில் திசைப்படுத்தும். வேகம் குறைக்கும்.
இது தவறான திசை என்பதை காட்டுக்கொடுக்கும். பரிகாரங்கள் பொய் என்றால் பரிகார ஸ்தலங்கள் பொய்யாகாது. இதுபோல் பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்....
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |