பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை! மனதை உருக்கும் நடிகையின் கடிதம்
சமீபத்தில் மும்பையில் மாடல் அழகியும், சினிமா நடிகையுமான அகான்ஷா மோகன் பிரபல ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை அகான்ஷா மோகன மும்பையில் திரைப்பட நடிகையாகவும், மாடலிங் துறையிலும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 16ம் திகதி வெளியான 'சியா' என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தியதில், கடிதம் ஒன்றை மீட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், 'மன்னிக்கவும், நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி மட்டுமே தேவை,எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல, யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்' என எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.