ரோஜா சீரியலில் அதிரடியாக நுழையும் புதிய வில்லி! யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்
சன்டியிவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் ரோஜா.
இதில் கொடூர வில்லியான பிரியா (அனு) கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷாமிலி.
இவரின் வில்லத்தனம் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். சிறப்பாக வில்லியாக நடித்து ரசிகர்களின் எதிர்ப்பை சந்தித்த அவர் தற்போது திடீரென சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
அவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சீரியலில், அனு சிறையில் இருப்பது போன்ற கட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அனு கதாப்பாத்திரம் மாற்றப்பட்டள்ளதால், அவர் சிறையில் இருந்து தப்பி விட்டது போலவும் அவருக்கு பதிலாக செய்து பொய்யான ஒருவர் சிறையில் இருப்பது போலவும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. சன் டிவி தொகுப்பாளினி அக்ஷயா தற்போது இந்தப் பொய்யான நபர் கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதன் மூலம் இவர்தான் அனு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஷாமிலியின் நடிப்பு ரசிகர்களுக்கு பழகிப்போன நிலையில், அக்ஷையாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.