கோலிவுட்டை கலங்கடித்த அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தல அஜித்தின் 62 வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பாகவே, தற்போது 63 வது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கும் படத்தை முடித்து விட்டு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் அஜித் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
அஜித்தின் சம்பளம்
90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர் அஜித்.
அஜித் நடிக்கும் 63வது திரைப்படத்திற்கு ரூ. 163 கோடியை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவர் அடுத்து நடிக்கவுள்ள படம் ‘விடாமுயற்சி’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் மகிஷ் திருமேனி இயக்குகிறார்.
நடிகை த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமார் நடிக்கும் 63வது திரைப்படத்தை இயக்குவது உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் 170 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இந்த திரைப்படத்தில் நடக்க 163 கோடி ரூபாய் தான் அஜித்குமார் சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரியவருகின்றது.
மேலும் இது தான் அஜித் இதுவரை வாங்கிய சம்பளத்தொகையில் அதிகமான சம்பளமாகும். இது கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |