வெளிநாட்டில் சொந்த வீடு வாங்கிய அஜித்: செய்தி கேட்டு அதிர்ச்சியில் தல ரசிகர்கள்
நடிகர் அஜித் வெளிநாட்டில் சொந்த வீடு செட்டிலாகி விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்.
இவர் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகியது.
இந்த திரைப்படம் விஜயின் வாரிசு திரைப்படத்தை தோற்கடித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
நடிகர் அஜித் குடும்பமாக பொது இடங்களில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அஜித்தின் புதிய வீடு
இந்த நிலையில் நடிகை ஷாலினியை திருமணம் செய்திருக்கும் அஜித் துபாயில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளராம்.
இந்த செய்தியை கேட்டு தல ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
நடிகர் சூர்யா மும்பையில் செட்டிலாகி விட்டார். இது போல் நடிகர் விஜய் லண்டனில் செட்டிலாகி விட்டார்.
இவர்களை தாண்டி தற்போது அஜித்தும் துபாய் பக்கம் சென்று விட்டார் என்றால் தென்னிந்திய சினிமா பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கும்.
நடிகர் அஜித் “ விடாமுயற்சி ” என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்ற போது அவர் அவரின் சொந்த வீட்டிலிருந்து தான் படப்பிடிப்புக்கு சென்றதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |