மனைவி ஷாலினியுடன் 4 மணிநேரம் சாலையில் நின்ற அஜித்! பிரபல தயாரிப்பாளர் அவிழ்த்த உண்மை
அஜித் சுமார் நான்கு மணிநேரம் நடு ரோட்டில் காத்திருந்ததாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளது, ரசிகர்கள் மனதை நெகிழ வைத்துள்ளது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகராக இருக்கும் அஜித், தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், மூன்றாவது முறையாக இணைந்து, 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை எடுப்பதற்காக தற்போது படக்குழு, பாங்காங் சென்றுள்ளது.
பாங்காங்கில் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்து விட்டது நாடு திரும்பியதும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டு, அடுத்த ஆண்டு, இந்த படத்தை ரிலீஸ் செய்யப்படக்குழு திட்டமிட்டுள்ளது.
பைக் மூலம் உலகை சுற்றி வர வேண்டும் என பிளான் போட்டுள்ள அஜித், இந்த படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து விட்டு மீண்டும் பைக் ரெய்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷாலினியுடன 4 மணிநேரம் ரோட்டில் அஜித்
தயாரிப்பாளர் தாணுவின் மனைவி 2001ல் இறந்தபோது, அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் பைக்கில் வந்து ரோட்டில் 4 மணிநேரம் காத்திருந்தாராம். அப்போது சிங்கபூரில் இருந்து வந்து கொண்டிருந்ததாக தாணு கூறியுள்ளார்.
தன்னுடைய படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் சோகத்திற்கு ஆறுதல் கூறவும், சோகத்தை பங்கு போட்டு கொள்ளவும் அஜித் செய்த இந்த செயல் நெகிழவைக்கும் விதமாக உள்ளது.
அஜித் தாணு தயாரித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி, அப்பாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலுடன் அஜித் மீண்டும் தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் அவர் நடிக்கும் படத்தை தயாரிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
