அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்... இணையத்தை கலக்கும் வீடியோ!
நடிகர் அஜித் மற்றும் தமிழக முால்வர் விஜய் இருவரும் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்வில் சந்தித்து நட்பு பாராட்டிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திரையுலகில் இருவருக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்புடன் பழகிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

குறிப்பாக, நண்பர் அஜித்துடன் விஜய் ரேஸ் காரில் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள புதிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
லண்டனில் அஜித் – விஜய் சந்திப்பு
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித், லண்டனின் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முதல்வர் விஜயும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டியை தொடங்கி வைத்தார். இதன்போது அஜித்தை நேரில் சந்தித்த விஜய், அவருடன் நீண்ட நேரம் உரையாடி நட்பு பாராட்டினார்.இருவரும் சந்தித்துக் கொண்ட காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
நீண்ட காலமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வரும் இருவரும் இவ்வாறு ஒரே நிகழ்வில் சந்தித்துக் கொண்டது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொண்டதும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக, விஜய்க்கு கார் ரேஸிங் உடை ஒன்றை அஜித் பரிசாக வழங்கியிருந்தார். அதன் பின்னர் இருவரும் ரேஸிங் உடையில் இந்தியக் கொடியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
வைரலாகும் விஜயின் வீடியோ
இந்த நிலையில், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்வில் விஜய் கலந்துகொண்ட முழுமையான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அவர் நிகழ்விற்கு வருவது, அஜித்தை சந்திப்பது, கார் பந்தயத்தை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல முக்கியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமின்றி, அஜித்துடன் இணைந்து ரேஸ் காரில் விஜய் பயணிக்கும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இருவரும் காரில் பயணிக்கும் அந்த தருணம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://t.co/M55AP6JJg2
— Vijay (@actorvijay) September 14, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |