விஜய் மகனை தன் மகனாக பார்த்த அஜித் - பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் ஓபன் டாக்!
VK Sundar Interview: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்திற்கு நடிகர் அஜித் குமார் கொடுத்த ஆதரவு குறித்து பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் பிஆர்ஓ பணிக்காக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை ஜேசன் சஞ்சய் அணுகிய நிலையில், சுரேஷும் அஜித்திடம் வந்து கேட்டார்.

உடனே அஜித்தோ, 'தாராளமாக வேலை செய்யுங்கள். இதில் என்ன இருக்கிறது என சொன்னார். மேலும், சுரேஷ் சந்திரா மூலம் ஜேசனை தொலைபேசியில் தொடர்புகொண்ட அஜித், “சினிமாவில் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள்; நான் உன்னுடன் இருக்கிறேன்” என சொன்னார். தன் நண்பரின் மகனை தன் மகனாகவே பார்க்கிறார் அஜித்" என தெரிவித்துள்ளார்.
விஜய்–அஜித் இடையே போட்டி நிலவிய காலகட்டத்தைத் தாண்டி, தற்போது இருவரும் நட்புடன் இருக்கும் நிலையில், விஜய்யின் மகனுக்கு அஜித் தனது மேனேஜரை பிஆர்ஓவாக பணியாற்ற அனுமதித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
மேலும் அஜித்தின் அடுத்த படங்கள் குறித்தும் சம்பளவிபரங்கள் குறித்தும் பல விடயங்களை பகிர்ந்துக்கொண்டார். பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் பேட்டியை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |