அஜித்தை கட்டியணைத்து ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ்! வெளியான ரொமாண்டிக் புகைப்படம்
தமிழ் சினிமாவில் நட்சத்திர திருமண தம்பதிகளாக பலம் வரும் அஜித் ஷாலினி சில தினங்களுக்கு முன்பு தங்களது 23வது திருமண நாளை கொண்டாடினர்.
அஜித் ஷாலினி
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் அஜித் ஷாலினி இருவரும் அமர்களம் படத்தில் நடித்ததன் மூலம் பின்பு காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களை நடித்து பின்பு மலையாளத்தில் வெளியான அனியாத பிறவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார்.
தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு, அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன.
2009 ம் ஆண்டு அஜித்தைக் காதலித்து வந்த இவர், அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களை நடித்த முடித்த பின்பு திருமணம் செய்து கொண்டார்.
பின்பு இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற குழந்தைகள் உள்ளனர். நடிகர் அஜித் தற்போது வரை உச்ச நடிகராக வலம்வருகின்றார்.
திருமணத்திற்கு பின்பு குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்ந்துவரும் ஷாலினி சமீபத்தில் தனது காதல் கணவர் அஜீத்துடன் திருமண நாளைக் கொண்டாடினார்.
அஜித் ஷாலினி இருவரும் பொதுஇடத்தில் ரொமாண்டிக்காக இருந்ததில்லை. ஆனால் தற்போது ரொமாண்டிக்கான புகைப்படத்தினை வெளியிட்டு தனது 23வது திருமண நாளை கொண்டாடியுள்ள நிலையில், இப்புகைப்படம் வைரலாகி வருகின்றது.