முகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கும் நடிகர் அஜித் - தமிழ் நாட்டில் மாற்றம்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அஜித்தின் ரேஸிங் அணி கைக்கோர்த்துள்ளார். இந்த எதிர்பார்க்காத கூட்டணி தற்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Ajith Kumar Reliance
நடிகர் அஜித்குமார் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் 80ஸ் காலங்களில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இவருடைய வாழ்க்கை முடிவுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சினிமாவில் ஒரு பக்கம் சாதனை படைத்து வருவதோடு, தன் மனதிற்கு பிடித்த கார் பந்தயத்திலும் ம் தன்னுடைய அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.

அஜித் குமார் ரேசிங்
கார் ரேசிங் மீது உள்ள தீவிர ஆர்வத்தால் தற்போது சில காலமாக சினிமால் இருந்து நடிகர் அஜித்குமார் இடைவெளி எடுத்து அந்த காலத்தை தனது கார் ரேஷிங் உலகத்தில் களித்து வருகிறார்.
இதற்காகவே அவர் “அஜித் குமார் ரேசிங்” என்ற நிறுவனத்தையும் தொடங்கி, தன் சொந்த ரேசிங் அணியை அமைத்துள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச பந்தயங்களில் பங்கேற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த 2025 க்ரெவென்டிக் 24 மணி நேர ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து, பல்வேறு சர்வதேச பந்தயங்களில் பங்கேற்கும் திட்டங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியாவை உலக மோட்டார் ஸ்போர்ட்ஸ் அரங்கில் ஒரு முக்கியமான இடத்தில் நிறுத்துவது தான் அஜித் குமார் ரேசிங் அணியின் முக்கிய இலக்காகும்.
அஜித் தற்போது வெளிநாடுகளில் தங்கி, தினமும் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய ஒவ்வொரு பந்தயத்திலும் இந்தியாவின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி
இந்த நிலையில், அஜித் குமார் ரேசிங் அணியுடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) இணைந்து பணியாற்றும் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி தலைமையில் இயங்குகின்றது. தனது பிரபலமான எனர்ஜி டிரிங்க் பிராண்டான “கேம்பா (Campa Energy)”-வை அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக அறிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஊக்குவிப்பது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

இதற்காக தான் அந்த பங்கி்ன் ஒரு கூட்டணியாக Ajith Kumar Reliance இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கூட்டணி இரண்டு பிராண்டுகளுக்கும் உலகளாவிய அளவில் அதிகமான அங்கீகாரம் கிடைக்க உதவும்,” என்று கூறப்பட்டுள்ளது.
கேம்பா எனர்ஜியின் ஆதரவுடன், அஜித் குமார் ரேசிங் அணி வரும் போட்டிகளில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் என ரசிகர்களும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் வட்டாரங்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |