அஜித்தை தரக்குறைவாக பேசிய வடிவேலு! 20 வருட கோபத்திற்கு காரணம் இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் அஜித், ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்பட்டு வருகின்றார்.
நடிகர் அஜித்
நடிகர் அஜித் ஆரம்பத்தில் பைக் மெக்கானிக்காக இருந்து, பின்பு விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதன்பின்பு பிரேம புஷ்தகம் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
தமிழில் அமராவதி படத்தில் அறிமுகமானார் அஜித். இதற்கு காரணம் எஸ்.பி.பி சரண் தான் காரணமாம். ஆம் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் அஜித்திற்காக இப்படத்தினை சிபாரிசு செய்துள்ளார்.
அதன் பின்பு பல படங்களில் நடித்த அஜித்திற்கு பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றது. ஆனாலும் அவரது ரசிகர்கள் அவரை முன்னணி நடிகராக உயர்த்தியே வைத்துள்ளனர்.
வடிவேலுடன் ஏற்பட்ட மனஸ்தாபம்
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ராஜா என்கிற படத்தில் நடித்தார். இப்படத்தில் இவர்கள் இருவரின் கொமடி வேற லெவலில் இருந்தது. இதில் அஜித்திற்கு மாமாவாக வடிவேலு நடித்ததால், அவரை வாடா போடா என்று அழைத்துள்ளார்.
படக்காட்சி மட்டுமின்றி, மற்ற நேரங்களிலும் அஜித்தை வாடா போடா என்று அழைத்ததால், மனம் கஷ்டப்பட்ட அஜித் இயக்குனரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இயக்குனரும் வடிவேலுவிடம் பேசியும், தன்னை மாற்றிக்கொள்ளாத வடிவேலு மறுபடியும் வாடா போடா என்றே அழைத்து வந்துள்ளார்.
அதனால் ஏற்பட்ட மனக்கஷ்டம் தற்போது வரை குறையவில்லை. ஆம் 20 ஆண்டுகள் ஆகியும் வடிவேலுவுடன் படத்தில் நடிப்பதற்கு அஜித் தயாராக இல்லையாம்.