திரையுலகில் 30 ஆண்டு பயணம்... வாழுங்கள் வாழவிடுங்கள் நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில், ஒருவரான ரசிகர்கள் தல என கொண்டாடப்படும் ஒரே நடிகர் அஜித் தான்...
இவர் எது செய்தாலும் இணையத்தில் அதை ரசிகர்கள் ட்ரெண்டாகி விடுவார்கள்... அண்மையில், அஜித்தின் வலிமை படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு.
இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், தான் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு நடிகர் அஜித் குறுந்தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “என் ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரே நாணயத்தின் மூன்று பகுதிகள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், பாரபட்சமில்லாத விமர்சனங்களை நடுநிலையாளர்களிடமிருந்தும் முழு மனதாக அன்புடன் ஏற்கிறேன்.
வாழுங்கள், வாழ விடுங்கள். என்றும் நிபந்தனையற்ற அன்புதான்”.என தெரிவித்ததாக அஜித் தரப்பில் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்த தகவலை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
Mr Ajith Kumar's message on his 30th year in the film industry
— Suresh Chandra (@SureshChandraa) August 5, 2021
Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals.
Live & Let live!
Unconditional Love Always!!
Ajith Kumar