இணையதளத்தை கலக்கும் அஜித்துடன் நேபாளத்தில் நடிகர் செல்ஃபி - வைரலாகும் வீடியோ
நேபாள ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். நடிகர் அஜித் 10ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. இதன் பிறகு அவர் ஒரு டெக்ஸ்டைல் தொழிலில் வேலை பார்த்து வந்தார்.
இவருடைய அழகைப் பார்த்து இவருடைய நண்பர்கள் மாடலிங் துறையில் முயற்சி செய் என்று ஊக்கப்படுத்த, நடிகர் அஜித் மாடலிங் துறையில் நுழைந்தார். மாடலிங் துறையில் நுழைந்த அஜித்திற்கு தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
‘அமராவதி’ படம் வெற்றி பெறவே, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அஜித்திற்கு குவியத் தொடங்கின. நடிகர் அஜித், பைக் மற்றும் கார் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். பல ரேஸ்களிலும் இவர் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது.
வைரலாகும் நேபாள ரசிகரின் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நேபாளத்தில் ரசிகர் ஒருவர், நடிகர் அஜித்துடன் செல்ஃபி எடுத்துள்ளார். மேலும், அந்த நேபாள ரசிகர் அஜித்குமார்ப் பார்த்து சவுத் இந்தியன் சூப்பர் ஸ்டார் அஜித்குமார் என்று கூறினார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
South India Superstar Ajith sir❤️
— THALA அரவிந்த் (@ThalaAravint) April 26, 2023
Nepal Thala Fan❤️?#AK62pic.twitter.com/QoUK7mOLcu