விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இறந்த பிரபலம்… சோகத்தில் மூழ்கிய படக்குழு…
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாரிக்கப்படுகின்ற விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் இடம்பெற்று வருகின்றது அப்படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், துணிவு படத்தின் வெற்றியை அடுத்து ஒப்பந்தமாகியுள்ள படம் தான் விடாமுயற்சி. தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமணி, இப்படத்தை இயக்கி வருகின்றார்.
விடாமுயற்சி கலை இயக்குநர்
இதில் நடிகை த்ரிஷா, அஜித்திற்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் படப்பிடிப்பை அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் கலை இயக்குநராக பணி புரிந்த மிலன் ஃபெர்னான்டஸ் விடாமுயற்சி பட வேலைக்காக அஜர்பைஜானில் தங்கியிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அஜித் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ஏகன், படத்தில் இருந்து தற்போது உருவாகி வரும் விடாமுயற்சி படம் வரை பல படங்களில் கலை இயக்குநராக மிலன் பணியாற்றியுள்ளார்.
வேதாளம், வீரம், விவேகம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இதனால் இவர் அஜித்திற்கு மிகவும் விருப்பமான கலை இயக்குநர் என்று திரையுலக வட்டாடங்களில் குறிப்பிடப்படுகின்றது.
கலை இயக்குநர் மிலன் தமிழில் வெளியான பல ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். விஜய்யுடனும் வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் மிலன் கலை இயக்குநராக பணி புரிந்துள்ளார்.கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தில் இவர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |