லேட்டா வந்த மேக்கப் மேன்: கோபத்தில் அஜித் செய்த செயல் - வாயடைத்த ரசிகர்கள்
படப்பிடிப்புக்கு லேட்டா ஓடி வந்த மேக்கப் மேனுக்கு அஜித் செய்த செயலை அறிந்து ரசிகர்கள் வாயடைத்துள்ளனர்.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் ‘தல’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர். நடிகர் அஜித் நிறைய பேருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால், அது யாருக்குமே தெரியாமல் செய்கிறார். வீட்டில் வேலை செய்பவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த விஷயம் கூட ரொம்ப மாதங்கள் கழித்து தான் தெரியவந்தது.
கோபத்தில் அஜித் செய்த செயல்
இந்நிலையில், நடிகர் மதுரை மோகன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது அஜித் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
நான் அஜித் சாருடன் ‘சிட்டிசன்’ படத்தில் நடித்துள்ளேன். அப்போது, ‘சிட்டிசன்’ படப்பிடிப்பில் மற்ற நடிகர்களின் மேக்கப் உதவியாளர்கள் குறித்த நேரத்தில் வந்துவிட்டார். ஆனால், அஜித்திற்கு மேக் அப் போடும் மேக்கப் உதவியாளர் வரவே இல்லை. இதனால், படப்பிடிப்பு தாமதம் ஆனது.
ரொம்ப நேரமாக அஜித் காத்துக்கொண்டிருக்க, மேக் அப் மேன் வியர்த்து ஓடி வந்தார். அப்போது, அஜித் அவரிடம் ஏங்க லேட்டா வந்தீங்க என்று கேட்டார். அந்த மேக் அப் மேன் சார்... நான் ரொம்ப தூரத்திலிருந்து வரேன். 2 பஸ் மாறி மாறி வரணும். அதனாலதான் சார் லேட் என்று கூறினார்.\
இதைக் கேட்ட அஜித், என்ன சொல்றீங்க... உங்ககிட்ட பைக் இல்லையா என்று கேட்டார். அதற்கு அந்த மேக் அப் மேன் சார்... இல்லை சார்... இதன் பிறகு அவர் மேக் அப் போட்டு முடிக்க, சில மணி நேரத்தில் புது ஹீரோ ஹோண்டா பைக்கின் சாவியை அஜித் அவரிடம் கொடுத்தார். இதைப் பார்த்த அந்த மேக்அப் மேன்னுக்கு என்ன செய்வது என்று அறியாமல் அந்த சாவியை திருப்பி அஜித்திடமே கொடுத்துவிட்டார்.
அப்போது, அஜித் என்னப்பா.. உனக்கு பைக் வேண்டாமா என்று கேட்க, சார் ஒரு நிமிடம் என்று கூறி அஜித் காலில் விழுந்துவிட்டு சாவியை வாங்கினார் அந்த மேக் அப் மேன்.
அப்போ... முதுகை தட்டி இப்படி எல்லாம் பண்ணக்கூடாது என்று அஜித் கூறி அவரை அனுப்பி வைத்தார். எப்படிப்பட்ட மனித மனிதர் அஜித் என்று மதுரை மோகன் தெரிவித்தார்.