நானும் தமிழன் தான்: வைரலாகும் அஜித்குமாரின் பழைய பேட்டி
நடிகர் அஜித்குமார் தனது பழைய நேர்காணல் வீடியோ ஒன்றில், அவர் தமிழன் தான் அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம் என்று கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் பல ஹிட்டான படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
தற்போது விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தில் இவருக்கு கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அஜித் குமார் தான் ஒரு தமிழர் என்று ஆணித்தரமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வகையில் அவரிடம் உங்களுடைய பெயர் வடமொழிப்பெயரா என்று கேள்வி கேட்கப்பட்டபோது, அஜித்குமார் என்ற பெயர் வடமொழிப்பெயர் தான்.
ஆனால் நான் தமிழன், நான் பிறந்து வளர்ந்த இடம் எல்லாம் சென்னை தான். என்னுடைய அப்பா தமிழ்நாட்டை சேர்ந்தவர், ஆனால் என்னுடைய அம்மா வட இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும் நான் ஒரு தமிழன் தான்.
எனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, எனக்கு பெரிதாக படிப்பதில் ஆர்வம் இல்லை, நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன்.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறி எனக்கு இருக்கிறது, எனவே என்னை வெளி ஆளாக பார்க்க வேண்டாம். நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் முதலில் நான் ஒரு தமிழன் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.
என் அப்பா ஒரு தமிழர்
— Natarajan (@natarajan333) February 18, 2024
அம்மா வட நாட்டை சேர்ந்தவர்
அஜித்குமாராகிய நான் ஒரு தமிழன் தான்
No doubt about it ?????#VidaaMuyarchi#Ajithkumar? pic.twitter.com/KG56d1pTRe