நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் கட்டி: அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்
நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் சிறிய கட்டி இருந்ததாகவும், அதை நீக்க அறுவைசிகிச்சை நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்றிரவு சமூகவலைத்தளங்களில் அஜித்குமாருக்கு அறுவைசிகிச்சை நடந்ததாக செய்திகள் பரவின.
மூளையில் சிறிய கட்டி இருந்தது கண்டறியப்பட்டதாகவும், நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்களால் சுமார் 4 மணிநேரம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டி அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மதுரை, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த மருத்துவர்களால் அறுவைசிகிச்சை நடந்ததாகவும் தெரிகிறது.
தொடர்ந்து அஜித்குமார் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |