நடிகர் அஜித்திற்கு பிடித்த பாடல் இதுவா? காணொளி மூலம் ஷாலினி உடைத்த உண்மை
நடிகர் அஜித் கார் ஓட்டிச்செல்லும் போது அவருக்கு பிடித்தமான பாடலை கேட்டு்க் கொண்டு வண்டி ஓட்டியதை அவரது மனைவி காணொளியாக வெளியிட்டுள்ளார்.
அஜித் ஷாலினி
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் அஜித் ஷாலினி இருவரும் அமர்களம் படத்தில் நடித்ததன் மூலம் பின்பு காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களை நடித்து பின்பு மலையாளத்தில் வெளியான அனியாத பிறவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார்.
தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு, அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன.
2009 ம் ஆண்டு அஜித்தைக் காதலித்து வந்த இவர், அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களை நடித்த முடித்த பின்பு திருமணம் செய்து கொண்டார்.
பின்பு இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற குழந்தைகள் உள்ளனர். நடிகர் அஜித் தற்போது வரை உச்ச நடிகராக வலம்வருகின்றார்.
திருமணத்திற்கு பின்பு குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்ந்துவரும் ஷாலினி, தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அஜித்திற்கு பிடித்த பாடல்
அஜித் பைக் பிசினஸில் கலக்கி வரும் நிலையில், அவரது மச்சினிச்சி ஓவிய திறமையால் திரையுலகை அசத்தி வருகின்றார். இந்நிலையில் அஜித்திற்கு பிடித்த பாடல் என்று ஷாலினி காணொளி ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் வெளியிட்டுள்ளார்.
1994ல் தமிழில் வெளிவந்த "பவித்ரா" படத்தில் இடம்பெற்ற " உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே" என்ற பாடல் தானாம். இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அவருக்கு தாயாக ராதிகாவும், தந்தையாக நாசரும் நடித்திருந்தனர்.
இப்பாடலைக் கேட்டுக்கொண்டு அஜித் கார் ஓட்டும் காணொளி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |