மகனின் ஃபுட்பால் ஆர்வத்தை ஊக்குவித்து பிறந்தநாள் கொண்டாடிய அஜித்... வைரல் புகைப்படங்கள்
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகர் அஜித்
'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 'வலிமை' வரை தனது 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித்.
சினிமாவில் கதாநாயகனாக இன்றுவரை தன் நிலையை தக்கவைத்திருக்கும் இவர் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகின்றார்.
அஜித்தின் மகன் ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் அதிகளவில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், அவருக்கு தங்கத்தினாலான காற்பந்து போன்ற கேக் ஒன்றை வெட்டி அவரின் ஃபுட்பால் ஆர்வத்தை மேலும் ஊக்குவித்துள்ளனர் அஜித்- சாலினி தம்பதிகள்.
ஆத்விக் பிறந்தநாள் கடந்த மார்ச் 2 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. அஜித்- சாலினி தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகளும் உண்டு. அனோஷ்கா- ஆத்விக் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
மகனின் ஆசைப்படி ஃபுட்பால் ஜெர்சி அணிந்து ஃபுட்பால் போன்ற கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஷாலினி பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |