மும்பை அணியில் நெட் பவுலராக இருந்து சாதனை புரிந்த அஜாஸ் படேல்! யாரும் அறிந்திடாத தகவல்;
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில், முதல் நேர ஆட்டத்தின் போது, நியூசிலாந்து அணியின் சுழல் நாயகன் அஜாஸ் படேல் இந்திய பேட்ஸ்மென் அனைவரையும் தனது மாயாஜால பந்துவீச்சால் பெவிலியனுக்கு அனுப்பி ஆச்சரியப்படுத்தினார்.
ஆம், 10 விக்கெட்டுகளை எடுத்து இந்திய வீரர்களையே அசர வைத்தார். உலக சாதனை படத்தை பட்டியலில் இவரும் இணைந்தார். யார் இவர், என்ற தேட-லில் இறங்கிய பலரும், அஜாஸ் யூனு-ஸ் படேல் எனும் இயற்-பெயர் கொண்ட அஜாஸ் படேல், யூனுஸ் படேல் - ஷானாஸ் படேல் தம்பதியினருக்கு மகனாக 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி பிறந்தார்.
அவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். அவருடைய மனைவியின் பெயர் நிலோபர் படேல். மேலும், இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திடாத சுவாரசிய தகவலாகும்.
அவருடைய பூர்வீகம் மும்பை ஆகும். அவர் தன்னுடைய 8 வயதில் மும்பையிலிருந்து நியூசிலாந்துக்கு தனது குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்தவர். மேலும், 33 வயதான அஜாஸ் படேல் நியூசிலாந்து அணிக்காக தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2018-ம் ஆண்டு அறிமுகமானார்.
முதலில் இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். அதன் பின் இடது கை சுழற்பந்து வீச்சாளராக மாற்றிக் கொண்டார். இதன்பின், 2015-16ம் ஆண்டுக்கான நியூ-சிலாந்து உள்ளூர் கிரிக்-கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்-தியவர் என்ற சாதனை படைத்தவர்.
அதன்பின்னர், 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடை-பெற்ற , நியூசிலா-ந்து கிரிக்கெட் விரு-துக்கான பட்டியலில், சிறந்த உள்ளூர் வீரரு-க்கான விருதை தட்டிச் சென்றார். இவருடைய திறமையான பந்துவீச்சால், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் பாகி-ஸ்தானுக்கு எதிரான நியூசி-லாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.
மேலும், கிரிக்கெட் வரலாற்றிலேயே 1956-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் ஜிம் லேக்கர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார். அதன்பின் 1999ம் ஆண்டு இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.
அவர்களுடன் இந்த சாதனை பட்டியலில் மூன்றாவது வீரராக அஜாஸ் படேலும் இணைந்துள்ளார். பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், இதுகுறித்து அனில் கும்ப்ளே தனது டுவிட்டர் பதிவில், “சாதனை பட்டி-யலுக்கு வரவேற்-கிறேன், சிறப்பாக பந்து-வீசினீர்கள்” என்று வாழ்த்தி உள்ளார்.