சாதனையாளர்களுடன் என் பெயரும் வரவேண்டும்.. இந்தியர்களை மிரட்டிய அஜாஸ் படேல் உருக்கம்!
இந்தியா நியூசிலாந்திற்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மும்பையை பூர்விகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் எடுத்து சாதனை புரிந்தார்.
இதுகுறித்து பேசிய அவர், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று என தெரிவித்தார். மேலும், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதை என்-னால் நம்ப முடியவில்லை.
இந்தச் சாதனையை மும்பை-யிலேயே, நிகழ்த்திய வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நிச்சயம் எனக்கு மட்டுமல்ல, எனது குடும்பத்துக்கும் இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அவர்கள் இங்கு வர முடியவில்லை. முந்தைய நாள் இரவில் வான்-கடே ஸ்டேடியத்தில் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தும் வீரர்களின் பெயரைப் பதித்து பெருமைப்படுத்தும் போர்டை பார்த்தேன்.
அதில், எனது பெயரும் இடம் பெற வேண்டும் என விரும்பினேன். ஆனால் இப்படிப்பட்ட சிறப்புகளோடு இணையும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன் கும்ப்ளே 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வீடியோ காட்சிகளை பலமுறை பார்த்துள்ளேன்.
அவரது கனி-வான வார்த்தைகளும், பாரா-ட்டும் நெகிழ வைக்கிறது. 10 விக்-கெட் சாதனை பட்டியலில் அவருடன் பணிவோடு இணைகிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இவருக்கு பல முன்னணி வீரர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.